ஆகாய வெண்ணிலாவே Aahaya Vennilaave

isaianban
0


படம்- அரங்கேற்ற வேளை 

பாடகர்கள்- Yesudass, Uma Ramanan
Scale-E

Male         ஆகாய வெண்ணிலாவே
                 தரை மீது வந்ததேனோ (2)

Female    அழகான ஆடை சூடி
                அரங்கேறும் வேளை தானோ (2)

    Lead-15

Male       ஆகாய வெண்ணிலாவே
                தரை மீது வந்ததேனோ


Female    அழகான ஆடை சூடி
                அரங்கேறும் வேளை தானோ

Male        மலர் சூடும் கூந்தலே
                மழைக் கால மேகமாய் கூட

Female    உறவாடும் விழிகளே
                இரு வெள்ளி மீன்களாய் ஆட
    
Male        ஆகாய வெண்ணிலாவே
                தரை மீது வந்ததேனோ

Female    அழகான ஆடை சூடி
                அரங்கேறும் வேளை தானோ

    Vl-24, St-12, Fl-8

Male    தேவார சந்தம் கொண்டு
             தினம் பாடும் தென்றல் ஒன்று
            பூவாரம் சூடிக் கொண்டு
             தலை வாசல் வந்ததின்று

Female    தென் பாண்டி மன்னன் இன்று
                திருமேனி வண்ணம் கொண்டு
                மடியேறி வாழும் பெண்மை
                படியேறி வந்ததின்று

Male    இள நீரும் பாலும் தேனும்
    இதழோரம் வாங்க வேண்டும்

Female    கொடுத்தாலும் காதல் தாபம்
    குறையாமல் ஏங்க வேண்டும்

Male    கடல் போன்ற ஆசையில்
    மடல் வாழை மேனி தான் ஆட

Female    நடு ஜாம வேளையில்
    நெடுநேரம் நெஞ்சமே கூட

Male    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ

Female    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ

Male    மலர் சூடும் கூந்தலே
    மழைக் கால மேகமாய் கூட

Female    உறவாடும் விழிகளே
    இரு வெள்ளி மீன்களாய் ஆட

Male    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ

Female    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ

    Ld-8, +Fl-16, St-8, +Fl-8

Female    தேவாதி தேவர் கூட்டம்
    துதி பாடும் தேவ ரூபம்
    பாதாதி கேசம் எங்கும்
    ஒளி வீசும் கோயில் தீபம்

Male    வாடாத பாரிஜாதம்
    நடை போடும் வண்ணப் பாதம்
    கேளாத வேணு கானம்
    கிளிப் பேச்சில் கேட்க்கக் கூடும்

Female    அடியாளின் ஜீவன் மேவி
    அதிகாரம் செய்வதென்ன

Male    அலங்கார தேவ தேவி
    அவதாரம் செய்ததென்ன

Female    இசை வீணை வாடுதோ
    இதமான கைகளே மீட்ட

Male    சுதியோடு சேருமோ
    சுகமான ராகமே காட்ட

Female    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ

Male    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ

Female    மலர் சூடும் கூந்தலே
    மழைக் கால மேகமாய் கூட

Male    உறவாடும் விழிகளே
    இரு வெள்ளி மீன்களாய் ஆட

Female    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ

Male    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ

Post a Comment

0Comments
Post a Comment (0)