ஒத்தயில நிக்கயில ஊருசனம் பார்க்கயில
அத்தனையும் விட்டுபுட்டு என் உறவாய் வந்தவளே
பந்தக்காலு நட்டு வச்சு பந்திச் சோறு போட்டு விட்டு
பக்குவமாய் நுழைஞ்சவளே பத்தமடை பெற்றவளே
காசு பணம் பெரிசா இல்ல, காலம் ரொம்ப செழிப்பா இல்ல
வாழும் வாழ்க்கை இன்பமாக்கி வலதுகையாய் இருப்பவளே
சின்ன சின்ன சண்டை போட்டும், சிடு சிடு ன்னு முகம் கொண்டும்
சேராம இருக்கலையே, சேரும் சுகத்த மறக்கலையே
உன்உயிரில் உன் உயிராய் ஓர் உயிரை எனக்குத் தந்து
உயிர் கொடுத்து வளர்ப்பவளே எங்கள் உயிராய் ஆனவளே
ஊரெல்லாம் சுத்திருக்கோம் உறவு சொல்லி மகிழ்ந்திருக்கோம்
உன்ன விட்டு நான் பிரிஞ்சி ஊரைக்கடந்து இருக்கிறேனே
எனக்காக நீ வந்த என்னவெல்லாம் விட்டுத் தந்த
உனக்கு ஒன்னும் நான் செய்யலயே உயிர்தான் இருக்கு என்னவளே...
------------------------------ ---------------------------
இதுவரைக்கும் உயிருடன் இசையன்பன்..
டிஸ்கி : இது எனது திருமண நாள் 20-02-2013 அன்று என் மனைவிக்காக எழுதியது..
வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்... /////
மிக்க நன்றி நண்பரே.. மிக்க மகிழ்ச்சி..