பேசு உயிரே

isaianban
7

கனவில் தினம் தோறும் தோன்றும்
உனை குவளை மலர் என்றே போற்றும்
உந்தன் நினைவு தவறாத போதம்
அது நித்தம் துடிக்கின்ற எந்தன் நாதம்.

மழையில் நீராடும் தேகம்
சுடும் வெயிலில் புழுபோல வாடும்
உன் உணர்வு மறையாத மோகம்.
அது எனது இதயத்தில் போடும் தாளம்.

கவிதை உனக்காக தொடங்கி
மனம் எழுத கூர்புத்தி செலுத்தி
கன்னி மனதை கவர்கொண்டு இழுக்க
வரும் வார்த்தை வெல்லாமல் நின்று திகைக்கும்

மௌனம் கொண்டாடும் சிலையே
மலர் மொட்டில் சீர்தூக்கும் அழகே
வானம் வந்தாடும் ஒளியே
நம் வாழ்க்கை உன் கையில் பேசு உயிரே

-----------------------------------------------------------
-------உங்கள் அன்பு இசையன்பன்-----------

Post a Comment

7Comments
  1. நித்தம் துடிக்கின்ற எந்தன் நாதம்.

    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  2. அழகான கவிவரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. K.s.s.Rajh said...
    அழகான கவிவரிகள் வாழ்த்துக்கள்////

    மிக்க நன்றி நண்பரே..! தங்களின் வருகை குறித்தும், தங்களின் கருத்து குறித்தும் மிக்க மகிழ்ச்சி....

    ReplyDelete
  4. இராஜராஜேஸ்வரி said...
    நித்தம் துடிக்கின்ற எந்தன் நாதம்.

    அருமையான பகிர்வு.//////

    மிக்க நன்றி சகோ.. மிகவும் மகிழ்ச்சி தங்களின் கருத்தினை பதிவிட்டமைக்கு......

    ReplyDelete
  5. அருமையான காதல்க் கவிதை! ...வாழ்த்துக்கள் சகோ -
    எல்லா ஓட்டும் போட்டாச்சு ......

    ReplyDelete
  6. அழகான வரிகள்.....

    ReplyDelete
  7. nithubaby said...
    அழகான வரிகள்.....///

    நன்றி தோழி :-)

    ReplyDelete
Post a Comment