கொஞ்சம் கொஞ்ச...

isaianban
10


கொஞ்சம் கொஞ்ச நானும் கெஞ்ச
உன்னைக் கொஞ்ச நாணம் கெஞ்சும்
கொஞ்சி கெஞ்சும் என்னை கொஞ்ச
கொஞ்சம் கெஞ்சும் வஞ்சி நெஞ்சம்

வஞ்சி கொஞ்சும் நேரம் பார்த்து
நெஞ்சம் போடும் ராகம் என்ன
வஞ்சி மஞ்சம் சேர்ந்த போதும்
கொஞ்ச கெஞ்சும் நாணம் என்ன

கஞ்சம் கொள்ளா நேரம் தோரும்
கொஞ்ச கெஞ்சும் நெஞ்சம் வேண்டும்
கொஞ்ச சொல்லி வஞ்சி கெஞ்ச
கொஞ்சம் கொஞ்சும் நெஞ்சம் வேண்டும்

மஞ்சம் கெஞ்சும் கொஞ்சல் கொஞ்சம்
கொஞ்சும் நெஞ்சம் தஞ்சம் கொள்ளும்
கெஞ்சி கெஞ்சி மஞ்சம் கொள்ள
வஞ்சி நெஞ்சம் கொஞ்ச சொல்லும்

------------------------------------------------
--உங்கள் அன்பு இசையன்பன்--------
http://www.kannniyam.blogspot.com/

Post a Comment

10Comments
  1. பெயருக்கேற்றார்போல் கவிதை
    சிறப்பாக உள்ளது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Blogger Ramani said...

    பெயருக்கேற்றார்போல் கவிதை
    சிறப்பாக உள்ளது
    தொடர வாழ்த்துக்கள்/////

    மிக்க நன்றி நண்பரே.. மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  3. அழகிய வரிகள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. இராஜராஜேஸ்வரி said...
    அழகிய வரிகள்.பாராட்டுக்கள்.///////


    மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  5. எனது மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே.....

    ReplyDelete
  6. வாலியும் வைரமுத்துவும் தோற்றார்கள். simply supper!. கல்யாணம்கட்டி 25 வருசமாச்சு ரொம்பநாள் வேஸ்ற்பண்ணிட்டனோ?

    ReplyDelete
  7. பலத்தார் said...
    வாலியும் வைரமுத்துவும் தோற்றார்கள். simply supper!. கல்யாணம்கட்டி 25 வருசமாச்சு ரொம்பநாள் வேஸ்ற்பண்ணிட்டனோ?////

    தங்களின் கருத்துரைக்கு.. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  8. இன்னும் கொஞ்சம் கொஞ்சம் வேண்டும் என கேட்க வைக்கிறது உங்கள் வரிகள் காஜா...

    ReplyDelete
  9. Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
    மிகவும் அருமை நண்பா...///

    மிக்க நன்றி நண்பர் தஞ்சை அவர்களே..

    ReplyDelete
Post a Comment