என்தன் மனம் ஒடைச்சி போயிட்டியே......

isaianban
2



கோடையில ஆத்துக்குள்ள
முங்கு போட்டு நா குளிக்க
ஆத்தாங்கர ஓரம் நின்னு
அக்கினியா சிரிச்சவளே

கிழக்கே உள்ள கோயிலுக்கு
ஆளில்லாத அந்தி நேரம்
சாடை தன்ன காட்டிபுட்டு
ஒத்த பாத வழி போரவளே



எட்டி நின்னு பேசனும்னு
ஏக விதி போட்டுவிட்டு
எடங்கு மடங்கா கிட்ட வந்து
ஏங்க வச்ச மாயவளே

உன் வாயசைச்சி ரகசியமா
ஏ மச்சான் என்னு சொல்லி
வரிச்சி கட்டிய தாவணியில் என்ன
முடிச்சி கட்டி போனவளே

என் மார் மேல சாஞ்சிகிட்டு
மனசெல்லாம் பூத்து நின்னு
மஞ்ச தாலி வேணுமுன்னு உன்
மனந்தொறந்து கேட்டவளே

உன் மச்சான் நானிருக்கேன்
மஞ்ச தாலி வச்சிருக்கேன்
வேற மணமுடிஞ்சி போயிட்டியே,
என்தன் மனம் ஒடைச்சி போயிட்டியே......

Post a Comment

2Comments
  1. கண்ணால் கண்டு
    கழண்டு சென்றவரை
    அவன் மனக் குமறலை அழகாய் சொல்லி உள்ளீர்

    ReplyDelete
  2. Blogger Arul Mozhi said...

    கண்ணால் கண்டு
    கழண்டு சென்றவரை
    அவன் மனக் குமறலை அழகாய் சொல்லி உள்ளீர்/////

    மிக்க நன்றி தோழி.. மகிழ்ச்சி

    ReplyDelete
Post a Comment