நான் கற்றதில்லை.,

isaianban
3


படிப்பறியான், தமிழ் படித்தறியான்,
பாவறியான், பாட்டு, பதமறியான்,
அடியறியான், தொடை, சீரறியான்,
நானூறறியான், சங்க நூலறியான்,
முற்றுமறியான், கார், முக்காரறியான்,

பள்ளி சென்று தமிழ் இலக்கியம் கற்றதில்லை.,
பண்டு தாய்தமிழை புரியாமல் விட்டதில்லை.,

கவி எந்தன் சிந்தையல்ல என உரைப்பேன்.,
சிந்தை சொல்லை கவித்தோலிட்டு கொடுப்பேன்.,

தமிழ் இல்லா வாசமில்லை அதற்கு நான் கடை பிள்ளை.....

Post a Comment

3Comments
  1. சிந்தை சொல்லை கவித்தோலிட்டு கொடுப்பேன்.,

    இந்த சிந்தனை ஒன்று போதுமே.. கவிதைக்கு பொய்யல்ல அழகு..மெய்யே.. Truth is beauty.. beauty is truth என்பார்களே..

    //தமிழ் இல்லா வாசமில்லை அதற்கு நான் கடை பிள்ளை.....//

    எப்போதும் கடைப்பிள்ளைகள் தான் பெற்றோருக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள்.

    நல்ல கவிதைக்குப் பாராட்டு..தோழா.

    ReplyDelete
  2. வட்ட சிகப்பு கடிகாரம் வாடி ஒடி திரிவது ஏனோ?

    ReplyDelete
  3. Blogger Arul Mozhi said...

    வட்ட சிகப்பு கடிகாரம் வாடி ஒடி திரிவது ஏனோ?

    நம் இனிய நேரம் என் இனிய நேரமாக மாறியிருக்குமென நினைக்கிறேன்..

    ReplyDelete
Post a Comment