எழுந்து விடாதே!!!!

isaianban
3
நிறை உழுது, விளை பெருக்கி,
கதிர் முறித்து,காளை பூட்டி,
களத்தில் குவித்து, கண் கொண்டு பார்த்து,

எங்கள் கண் இவ் விளை என்று மார்பூத்து,
வெறுமை நீக்கி, வெகுண்ட பசி போக்கி,
பெருமை ஏற்றிய பொன் எனும் விளை நிலத்தை

மண் நிறைத்து, பட்டா போட்டு, பணத்திற்கு விற்று,
மாடி மேல் மாடி வைத்து, மாளிகை எழுப்பி,
மகிழ்ந்து வாழ தொடங்கிய மனிதா,,

அதில் சுகமாய் உறங்கி கொண்டே இரு,
எழுந்து விடாதே, எழுந்தால் உனக்கும் பசிக்கும்
வருங்காலத்தில் பசிக்கு சோறு இல்லையாம்...

Post a Comment

3Comments
  1. \\\அதில் சுகமாய் உறங்கி கொண்டே இரு,
    எழுந்து விடாதே, எழுந்தால் உனக்கும் பசிக்கும்
    வருங்காலத்தில் பசிக்கு சோறு இல்லையாம்..//
    ... அருமை. நண்பா...... மரக்கறி விடுத்து மனிதக்கறி தின்பார்களோ?

    ReplyDelete
  2. மண் நிறைத்து பட்டா போட்டு பணத்தை விற்று/// அருமை நண்பா பணத்தையா திண்பார்கள் பொணங்கொத்தியாய் மாற வேண்டியது தான்

    ReplyDelete
  3. Blogger Arul Mozhi said...

    மண் நிறைத்து பட்டா போட்டு பணத்தை விற்று/// அருமை நண்பா பணத்தையா திண்பார்கள் பொணங்கொத்தியாய் மாற வேண்டியது தான்/////

    அப்படித்தான் நிலைமை மாறிவிடும் போல...

    ReplyDelete
Post a Comment